Gavitha / 2015 பெப்ரவரி 25 , மு.ப. 07:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐஸ்கிறீம் என்றாலே சிறியோர் முதல் பெரியோர் அனைவருக்கும் வாயூறும்.
அது அவ்வாறிருக்கையில், ஐஸ்கிறீம் உண்ண ஆசைப்பட்ட காதலன் இறுதியில் நிர்வாணமாக ஓடிய துர்பாக்கிய சம்பவமொன்று ஐஸ்லாந்தில் இடம்பெற்றுள்ளது.
பெயர் குறிப்பிடப்படாத ஜோடியொன்று அவர்களது விடுமுறையை கழிப்பதற்காக, ஐஸ்லாந்திலுள்ள போர்காபிக்கோ என்ற கிராமத்துக்குச் சென்றுள்ளனர்.
அங்கு சென்றதும் ஏதாவது சுவையாக உண்ண வேண்டும் என்று எண்ணி, இணையத்திளத்தில் கெனபிஸ் ஐஸ்கிறீம் செய்வது எவ்வாறு என்பதை தேடியறிந்துள்ளனர்.
பின்னர் இணையத்தளத்தில் கொடுக்கப்பட்ட ஐஸ்கிறீம் செய்முறைக்கு அதனை செய்து ருசிபார்த்துள்ளனர்.
ஐஸ்கிறீம் உண்ட சில மணிநேரத்தில், காதலன் அணிந்திருந்த உடைகளை களைந்துவிட்டு நிர்வாணமாக வீட்டுக்கு வெளியே கூச்சலிட்டுக்கொண்டு ஓடியுள்ளார்.
அதுமட்டுமல்லாது, மேற்படி நபரின் காதலியும் கடும்காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில, அவசர உதவி பிரிவுனூடாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட இவர்கள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பினர்.
குறித்து இணையத்தளத்தில் ஐஸ்கிறீம் செய்முறை பிழையாக தொகுக்கப்பட்டிருப்பதாக விசாரணைகளின் பின்னர் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மேற்படி ரெசிப்பியுள்ளது போன்று ஐஸ்கிறீம் தயாரிக்கும் தொழிற்சாலையை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செய்முறைகளை பயன்படுத்;தி உணவு உண்ண வேண்டாம் என்று பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
6 minute ago
22 minute ago
31 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago
31 minute ago
35 minute ago