Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிகழ்கால உலகில் நடப்பவை எல்லாம் எதிர்கால மனிதனுக்கு ஏதோ சொல்ல விழைவதுடன் மனித இனத்துக்கு ஏதோ நடக்கப்போகின்றது என்பதை உணர்த்துவதாக அமைகின்றது. உலகத்தை வெல்லுவதற்கு மனிதன் என்னதான் செய்தாலும் அது கைமீறியே செல்கின்றது.
அந்த வகையில், வயது முதிர்ந்த கோபக்கார வயோதிபரின் முகத்தை கொண்டு ஆட்டுக்குட்டியொன்று பிறந்துள்ளமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தென்மேற்கு ரஷ்யாவின் சிர்க்கா எனும் கிராமத்தில் பிராசியூஸ் என்பவர் ஆடுகளை வளத்து அதனை விற்று வருமானம் தேடி வருகின்றார். வழமைபோல இம்முறையும் அவர் வளர்க்கும் ஆடு, குட்டி ஈனுவதற்காக இருந்தது.
பிறக்கும் குட்டியை விற்றுவிடலாம் என்று ஆர்வமாக காத்திருந்த உரிமையாளருக்கு அதிர்ச்சி மட்டுமே எஞ்சியது. ஏன் தெரியுமா? பிறந்த ஆட்டுக்குட்டியின் முகம் ஒரு கோபக்கார, பற்களற்ற வயோதிபரின் முகம் எவ்வாறு இருக்குமோ அவ்வாறே அமைந்திருந்தது.
இந்த ஆட்டுக்குட்டி இவ்வாறு பிறந்தமைக்கான காரணம் ஏன் என்று தெரியவில்;லை என்று ஆட்டுக்குட்டியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். மேலும், ஆட்டுக்குட்டியின் பெற்றோர்களுக்கு இவ்வாறான எவ்வித குறைப்பாடுகளும் இல்லாத நிலையில், இந்த ஆட்டுக்குட்டி மட்டும் எப்படி இவ்வாறு பிறந்தது என்று இன்னும் புரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விற்பனைக்காக மாத்திரம் ஆட்டுக்குட்டி வளர்க்கும் இந்த உரிமையாளர் தற்போது இந்த ஆட்டுக்குட்டியை பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்போவதாகவும் இதனை அவர்களுடைய செல்லப்பிராணியாக வளர்க்கப்போவதாகும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago