Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஒக்டோபர் 29 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழும் நாட்களில் மனிதர்களை ஆட்டிப் படைக்கும் ஒரு விஷயம் உண்டு என்றால் அது ஆசை தான்.. பணம், பொருள், புகழ், என பலருக்கு பேராசை ஏற்படும். நகை, சொத்து, கார்கள் இவற்றை வாங்கி குவிப்பதில் சிலருக்கு பேராசை வரும். இதெல்லாம் சகஜம் தான்.
ஆனால் ஜார்ஜியாவில் வசிக்கும் ரஷ்யாவைச் சேர்ந்த பெண்ணுக்கு வித்தியாசமான ஆசை ஏற்பட்டுள்ளது. அவர் 100 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது ஆசையாம். அவர் தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
ஜார்ஜியா நாட்டில் வசித்து வரும் ரஷ்யாவை சேர்ந்த 26 வயதுடைய கிறிஸ்டினா ஓஸ்டுர்க் என்ற இளம்பெண், 58 வயதுடைய காலிப் ஓஸ்டுர்க் என்ற கோடிஸ்வரருடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் இவரின் மனைவி கிறிஸ்டினாவுக்கு 105 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வித்தியாசமான ஆசை ஒன்று ஏற்பட்டுள்ளது. இதற்கு கணவர் காலிப் ஓஸ்டுர்க்கும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மனைவி கிறிஸ்டினா தற்போது தன்னுடைய 26 வயதில் 22 குழந்தைகளுக்கு தாயாகி உள்ளார்.
முதலில் பிறந்த குழந்தை மட்டுமே கிறிஸ்டினா-வின் நேரடி பிரசவத்தில் பிறந்தது. அந்த குழந்தைக்கு தற்போது 9 வயது ஆகிறது. மற்ற 21 குழந்தைகளும் வாடகை தாய் முறையில் பெற்றெடுத்த கிறிஸ்டினா, தற்போது 22 குழந்தைக்கு தாயாகி உள்ளார்.
அத்துடன் கிறிஸ்டினா தன்னுடைய 22 குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையில், தனக்கு 100 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஆசை, எனவே 100 குழந்தைகளை தாண்டி பெற்றுக் கொள்ளும் வரை இதனை நிறுத்த மாட்டேன் என கிறிஸ்டினா தெரிவித்துள்ளார்.
4 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
57 minute ago
1 hours ago