Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Kogilavani / 2011 ஏப்ரல் 27 , பி.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெல்லியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், தனது உடலில் பல்வேறு நாடுகளின் 305 கொடிகளை பச்சை குத்தியுள்ளார்.
ஹார் பிரகாஷ் எனும் இவ்வர்த்தகர், தனது உடலில் மேலும் பல கொடிகளை பச்சைக் குத்திக்கொண்டு, தனது பெயரை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்துகொள்ள விரும்புகின்றார். தன்னை கின்னஸ் ரிஷி என மற்றவர்கள் அழைப்பதை அவர் விரும்புகிறாராம்.
'மக்கள் என்னைப் பார்த்து கோமாளி என்கின்றனர். பைத்தியம் என்கின்றனர் அது குறித்து நான் அலட்டிக்கொள்ளவில்லை' என அவர் தெரிவித்துள்ளார்.
நேபாளத் தலைநகர் காத்மண்டில் நடைபெறும் சர்வதேச பச்சைக் குத்தும் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஹார் பிரகாஷ், அங்கு பெரும் எண்ணிக்கையானோரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
அவரது உடலில் வெவ்வேறு நாடுகளின் 305 கொடிகள், 185 வரைபடங்கள், 165 சிறிய கொடிகள், மற்றும் 2,985 எழுத்துக்கள் பச்சைக் குத்தப்பட்டுள்ளன.
'உலகை பல முறை சுற்றிவர வேண்டுமென்பது எனது கனவு. அந்த நாடுகளின் சிறுவர்கள் என்னிடம் 'எங்கே எங்களது நாட்டின் கொடி' என கேட்பதை நான் விரும்புகின்றேன்' என அவர் கூறியுள்ளார்.
CIDDEEQUE Saturday, 30 April 2011 12:57 AM
எப்படியல்லாம் பிரபல்யமாக முயறு;சிக்கிறார் இவர். இது ஒரு யோசனையா? உழைத்து வைத்து சும்மா இருக்கத்தான்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
24 minute ago
1 hours ago
14 May 2025