2025 மே 14, புதன்கிழமை

4 வயதான மகனுக்கு தாய்ப்பாலூட்டும் பெண்

Kogilavani   / 2012 மே 11 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 4 வயதான தனது மகனுக்கு பெண்ணொருவர் தாய்ப்பாலூட்டும் காட்சி பிரபல 'டைம்' சஞ்சிகையின் அட்டைப்படமாக வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் லொஸ் ஏன்ஜல்ஸை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான ஜெமி லின் கிரம்ட் என்ற 26 பெண்ணே தனது மகனுக்கு பாலூட்டியவாறு புகைப்படத்திற்கு போஸ்கொடுத்துள்ளார்.

இப்பெண் தனது 5 வயது வளர்ப்பு மகனான சாமுவேலிற்கும் இதேபோன்று நீண்டகாலம் தாய்ப்பாலூட்டியதாக கிரம்மட் தெரிவித்துள்ளார்.

அதேவேளை,  தனக்கு 6 வயதாகும்வரை தனது தாயார் தாய்ப்பாலூட்டியதாகவும் கிரம்மட் தெரிவித்துள்ளார்.

தனது தாயிடம் தான்  பால்குடித்த போது அன்பையும் அரவணைப்பையும் பாசத்தையும் உணர்ந்ததாகவும் இதனால் தனத தன்னம்பிக்கை அதிகரித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் எத்தியோப்பியாவிலிருந்து தான் தத்தெடுத்த மகன் சாமுவேலுக்கும் பின்னர் தனக்குப் பிறந்த மகன் ஆரமிற்கும் இதே நடைமுறைகளை பின்பற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .