2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

5 மாணவர்களுடன் தகாத உறவுகொண்ட ஆசிரியைக்கு சிறைத்தண்டனை

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவர், 18 வயது மாணவர்கள் ஐவருடன் பாலியல் உறவு வைத்து கொண்ட குற்றத்திற்காக 5 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

ஆர்லிங்க்டன் பகுதியை சேர்ந்த பிரிட்னி நிக்கோல் கோல்ப்ஸ் என்ற 28 வயது ஆசிரியையே இரு வருடங்களுக்குமுன் இவ்வாறான குற்றத்தை புரிந்துள்ளார்.

கோலப்ஸ் ஏலவே திருமணமானவர். அவருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இவர் குற்றச்சாட்டுகளையடுத்து ஏற்கெனவே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பல மாணவர்கள் சம்பந்தப்பட்ட செல்லிட தொலைபேசி வீடியோ காட்சியொன்று வெளிவந்ததையடுத்து அவர் தானாக பொலிஸில் சரணடைந்தார். நீதிமன்றத்தில அந்த வீடீயோ காட்சி காண்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி மாணவர்களில் மூவர், இவ்விடயத்தில் தாம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லர் எனவும் தமது முன்னாள் ஆங்கில ஆசிரியையை  மீது வழக்குத் தொடுக்கப்படுவதை தாம் விரும்பவில்லை எனவும் தெரிவித்தனர்.

மேற்படி 3 சிறுவர்களும் கால்பந்து மற்றும் மெய்வன்மை விளையாட்டு வீரர்களாவர். இவர்கள் தற்போது 20 வயதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், ஆர்லிங்கடன் பொலிஸ் புலனாய்வாளர் ஜோஸன் ஹவுஸ்டன் கூறுகையில், 'அம்மாணவர்களுக்கு 18 வயதோ இல்லையோ, மாணவர்களுடன் ஆசிரியை பாலியல் உறவுகொள்வது குற்றமாகும் என்பதால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது' எனத் தெரிவித்தார்.

முதலில் குறுந்தகவல்கள் மூலம் தொடர்புகள் ஆரம்பித்ததாகவும் அதுபின்னர் பாலியல் ரீதியானவையாக மாறியதாகவும்  ஏனைய இரண்டு மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

குழுவாக பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்ட மற்றுமொரு மாணவன், கடைசியாக பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட  காட்சியை தொலைபேசியில் பதிவு செய்துள்ளனான்.

ஆசிரியையை பிரச்சினைக்குள் தள்ளிவிட கூடாது என்பதற்காக தாம் இவ்விடயத்தை மறைத்ததாக மேற்படி மாணவன் தெரிவித்துள்ளான்.

2011 மே மாதம், இம்மாணவனை பாடசாலை நிர்வாகமானது விசாரணைக்காக அழைத்தபோது ஆசிரியை மீதான குற்றச்சாட்டை நிராகரித்ததாக அம் மாணவன் தெரிவித்துள்ளான். 'ஏனெனில், ஆசிரியையை நான் காப்பாற்ற நினைத்தேன்' என அம்மாணவன் கூறியுள்ளான்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .