2024 ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை

6 வினாடி முத்த சூத்திரம்: ஆண்களுக்கு கட்டாயம்

Editorial   / 2024 ஜூன் 05 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முத்தம் யாருக்குத் தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் யார் வேண்டுமானாலும் அன்பின் வெளிப்பாடாக முத்தத்தை பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால் ஒரு ஆணும் பெண்ணும் பகிர்ந்து கொள்கிற முத்தம் கூடுதல் ஸ்பெஷல் தான். ஆனால் பெரும்பாலான ஆண்களுக்கு சரியாக முத்தம் கொடுக்கத் தெரியாது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம். 6 வினாடியின் முத்தம தரும் சூட்சமம் ஒன்று இருக்கிறது. அது பெரும்பாலான ஆண்களுக்கு தெரியாதாம். நீங்க அந்த சூடு்சமத்தை தெரிஞ்சிக்கணுமா? வாங்க தெரிஞ்சிக்கலாம்.

காதலில் முத்தம் இல்லாத காதல் இருக்க முடியுமா? மனிதர்கள் மட்டுமல்ல, எல்லா உயிரினங்களுமே முத்தத்தை விரும்பக்கூடியவை தான். மனிதர்கள் ஒரு குழந்தை பிறந்தது முதல் தங்களுடைய அன்பை பரிமாறும் கருவியாக முத்தத்தை பயன்படுத்துவார்கள். அதில் உடலின் ஒவ்வொரு இடத்திலும் கொடுக்கப்படும் முத்தத்துக்கும் ஒருவித அர்த்தங்களை சொல்வார்கள். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு முத்தம் சரியாகக் கொடுக்கத் தெரியாதாம்.

ஆண்களை விடவும் பெண்கள் தன்னுடைய வாழ்க்கை குறித்து, முக்கியமாக தன்னுடைய பாட்னரை குறித்து அதிகமாக யோசிக்கிறார்கள்.


எப்போதும் அவர்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதால் வாழ்க்கை பற்றிய நிறைய கவலைகளும் அதிகமாகின்றன.

நீங்கள் அவர்களை அவ்வப்போது முத்தமிடுவதால் அவர்களுடைய கவலை குறைந்து, ஒருவித பாதுகாப்பு உணர்வைப் பெறுவதாகக் கூறப்படுகிறது.

பாட்னரை முத்தமிடும் ஆண்கள் வழக்கத்தை விடவும் 4 ஆண்டுகள் கூடுதலாக உயிர் வாழ்கிறார்களாம்.

காட்மேன் இன்ஸ்டிடியூட்டில் டாக்டர் ஜான் மற்றும் ஜூலி காட்மேன் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது தங்களுடைய பாட்னருக்கு முத்தம் கொடுக்க வேண்டும்.

அப்படி முத்தமிட்டு செல்லும் ஆண்கள், அவ்வாறு முத்தமிடாத ஆண்களைக் காட்டிலும் சராசரியாக 4 ஆண்டுகள் அதிகமாக உயிர் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இது வேறொன்றுமில்லை. உதட்டோடு உதடு வைத்து கொடுக்கும் லிப் - லாக் முத்தம் தான் அது.


6 வினாடிக்கு மேல் இருக்கக் கூடாதா என்று கேட்கக் கூடாது. 6 வினாடிக்கு மேல் எவவளவு நேரம் வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் 6 வினாடிக்கும் குறைவாகக் கொடுக்கக் கூடாது.

அது ஏன் தெரியுமா, அதற்குப் பின்னால் அறிவியல் இருக்கிறது. 6 வினாடிகள் தொடர்ந்து முத்தமிடும் போது தான் இருவருடைய உடலிலும் மகிழ்ச்சி ஹார்மோனான ஆக்ஸிடாக்ஸின் ஹார்மோன் வெளியிடப்படும். அதற்கு குறைவாக முத்தமிடும் போது இந்த ஹார்மோன் சுரப்பு ஏற்படுவதில்லை.

முத்தம் கொடுப்பதற்கு மட்டும் தான் 6 வினாடி என்கிற கணக்கு இருக்கிறது என்று நினைக்காதீர்கள்.

கட்டிப் பிடிப்பதற்கும் குறிப்பிட்ட கால அளவு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உங்கள் பாட்னரைக் கட்டிப்பிடிக்கும் போது குறைந்தது 20 வினாடிகள் கட்டிப் பிடிக்க வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .