2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

76 வயதில் திருமண புகைப்படம் பிடித்த ஆசிரியை

Kogilavani   / 2012 செப்டெம்பர் 29 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர், கணவன் இறந்து 30 வருடங்களின் பின் தானே மணமகளாகவும்  மணமாகனாகவும இருந்து திருமண புகைப்படம் தயாரித்த சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.

லியு பூ என்ற ஆசிரியையே இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார். இவர் சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் தனது திருமண புகைப்படங்களை பிடித்துள்ளார்.

'நாங்கள் திருமணம் செய்யும்போது போதியளவு பணம் எம்மிடம் இருக்கவில்லை. என்னுடைய கணவர் பெங்கும் நானும் செலவுகள் இன்றி சாதாரணமாகவே திருமணம் செய்துக்கொண்டடோம். ஆனால், திருண புகைப்பட அல்பம் ஒன்றை உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்று எப்போதும் நினைப்பேன்' என மேற்படி ஆசிரியை தெரிவித்துள்ளார்.

இவரின் இரட்டை வேடத்திற்காக ஆடை வடிவமைப்பாளர், சிகையலங்காரிப்பாளர், ஒப்பனைக் கலைஞர் ஆகியோர் பல மணித்தியாலங்களை செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மணமகனிற்கான ஆடையை முதலில் அணிந்த லியு அரசரைப் போன்றும் பின்பு 1920 சங்காயில் காணப்பட்ட ஆண்களுக்கான ஆடை வடிவமைப்பையும் அணிந்துள்ளார்.

பின்னர், மணமகளுக்கான ஆடையை அணிந்த இவர் முதலில் இளவரசிக்கான ஆடையையும்  பின்பு மேற்கத்தீய வெள்ளை நிற ஆடையையும் அணிந்து புகைப்படங்களை எடுத்துள்ளார்.

'இது மிகவும் அற்புதமானது. எனது அனைத்து கனவுகளுக்கும் விடை கிடைத்துவிட்டது. இந்த மகிழ்வை பகிர்ந்துக்கொள்ள எனது கணவர் அருகில் இல்லை என்பதுதான் எனது ஒரேயொரு கவலை' என அவர் மேலும் தெரிவித்தார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .