A.P.Mathan / 2012 செப்டெம்பர் 14 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் ஆபிரிக்க, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் சரவதேசப் போட்டி தொடர் விறுவிறுப்பாக நிறைவடைந்தது. இரு அணிகளும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை சமநிலையில் நிறைவு செய்தன. ஆரம்பம் தென் ஆபிரிக்க அணி பக்கமாக இருந்த போதும் தன் பக்கமாக போட்டி தொடர் போக்கை மாற்றிய இங்கிலாந்து அணி இறுதியில் தொடரை கைப்பற்ற முடியாமல் போனது. தென் ஆபிரிக்க அணி தொடரை சமன் செய்தது. முதல் தர அணிகள் இரண்டுக்கும் இடையிலான போட்டி தொடர் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று இந்த தொடர் அமைந்தது. முதற் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தென் ஆபிரிக்க அணி முதல் இடத்தைப் பெற்றுக் கொண்டது. ஆனலும் அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தமை அவர்களின் முதல் இடத்தை மீண்டும் பறிகொடுக்க வேண்டிய நிலையை வழங்கியது. ஆனாலும் அந்த முதல் இடம் சாதனை முதலிடமாக மாறியது. டெஸ்ட் போட்டிகளில் முதல் இடத்தைப் பெற்றுக் கொண்ட தென் ஆபிரிக்க அணி, ஏற்கனவே ட்வென்டி ட்வென்டி போட்டிகளிலும் முதல் இடத்தை வைத்து இருந்தது. இந்த நிலையில் ஒருநாள் போட்டிகளிலும் முதல் இடம் கிடைக்க மூன்றுவித தரப்படுதல்களிலும் ஒரே நேரத்தில் முதலிடத்தில் இருந்த அணி என்ற சாதனை அவர்களுக்கு கிடைத்தது..jpg)
.jpg)

19 Nov 2025
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Nov 2025
19 Nov 2025