Janu / 2026 மார்ச் 22 , பி.ப. 04:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்று வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஆணின் சடலம் சனிக்கிழமை (21) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் வீட்டில் வசித்து வந்த நபர் கடந்த சில நாட்களாக வெளியே நடமாடாததை கவனித்த அப்பகுதி மக்கள், அவரது உறவினர்களுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த உறவினர்கள் வீட்டை திறந்து பார்த்தபோது, அங்கு அவர் சடலமாக இருப்பதை அவதானித்து மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
செம்பியன்பற்று வடக்கு பகுதியை சேர்ந்த செபமாலை செல்வசிங்கம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பூ. லின்ரன்

9 hours ago
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Mar 2026