2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

இராமேஸ்வர மீனவர்களுக்கு விளக்கமறியல்

R.Tharaniya   / 2025 ஜூன் 30 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தலை மன்னார் கடற்பரப்பில் கைதான இராமேஸ்வர மீனவர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் ஞாயிற்றுக்கிழமை (29)  அன்று உத்தரவிட்டார்.

இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று ஞாயிற்றுக்கிழமை (29)  அன்று அதிகாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மன்னார் வடக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் 8 இராமேஸ்வர மீனவர்களை கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட குறித்த மீனவர்களை கடற்படையினர் தலைமன்னார் கடற்கடையினரிடம் ஒப்படைத்தனர்.

தலைமன்னார் கடற்படையினர் விசாரணைகளை தொடர்ந்து குறித்த மீனவர்களை  மன்னார் கடற்றொழில் திணைக்கள  அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை  மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதன்போதுவிசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஆர்.லெம்பேட்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X