2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

இளைஞரை காணவில்லை தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ளவும்

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 05 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஆர்.லெம்பேட்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் புளியங்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கர் அருண் (வயது-24) என்ற இளைஞர் கடந்த 30 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது தந்தை  அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த இளைஞன் கடந்த 30 ஆம் திகதி தனது வீட்டில் இருந்து அடம்பன் பகுதிக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகன் வீடு திரும்பாத  நிலையில் அவரது தந்தை அடம்பன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த இளைஞன் குறித்து தகவல் தெரிந்தவர்கள் 076- 712 1294 மற்றும் 077-0631135 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு தெரிவிக்குமாறு குடும்பத்தார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X