2026 ஏப்ரல் 02, வியாழக்கிழமை

உயர்தரப் பரீட்சை: ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் சாதனை

Editorial   / 2026 ஏப்ரல் 01 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூ.லின்ரன், 
 
 வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி, யாழ்ப்பாணம் வடமராட்சி ஹாட்லிக் கல்லூரி (Hartley College) மாணவர்கள் மாவட்ட மற்றும் தேசிய மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுப் பெரும் சாதனை படைத்துள்ளனர்.
 
துறை வாரியான சாதனைகள்:
 
கணிதப் பிரிவு: மாணவன் அனுராகந்தன் விஸ்வகாந்தன் 3 'A' சித்திகளைப் பெற்று, யாழ். மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும், தேசிய மட்டத்தில் 12-வது இடத்தையும் பிடித்துக் கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
 
உயிரியல் பிரிவு: மாணவன் சந்திரபாலா கதுசன் 3 'A' சித்திகளைப் பெற்று, மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும், தேசிய மட்டத்தில் 20-வது இடத்தையும் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.
பொறியியல் தொழில்நுட்பப் பிரிவு: மாணவன் உமாபதி கிருஷாந்த் 2 'A' மற்றும் ஒரு 'B' சித்திகளைப் பெற்று, மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தையும், தேசிய மட்டத்தில் 50-வது இடத்தையும் பெற்றுள்ளார்.
 
 
 
ஒட்டுமொத்தப் பெறுபேறுகள்:
 
ஹாட்லிக் கல்லூரியின் ஒட்டுமொத்த பெறுபேறுகள் வருமாறு:
 
கணிதப் பிரிவு: 10 மாணவர்கள் 3 'A' சித்திகளையும், 2 மாணவர்கள் 2 'A', 'B' சித்திகளையும் பெற்றுள்ளனர்.
 
உயிரியல் பிரிவு: 6 மாணவர்கள் 3 'A' சித்திகளையும், 4 மாணவர்கள் 2 'A', 'B' சித்திகளையும் பெற்றுச் சாதனை புரிந்துள்ளனர்.
 
ஏனைய துறைகள்: பொறியியல் தொழில்நுட்பத் துறையில் 12 மாணவர்களும், உயிரியல் தொழில்நுட்பத் துறையில் 2 மாணவர்களும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். அத்துடன் வர்த்தகத் துறையில் 5 மாணவர்களும், கலைத் துறையில் 5 மாணவர்களும், ஏனைய பாடத் துறைகளில் ஒரு மாணவனும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
 
வடமராட்சி மண்ணிற்குப் பெருமை சேர்த்த இந்த மாணவர்களையும், அவர்களுக்கு வழிகாட்டிய அதிபர் மற்றும் ஆசிரியர்களையும் பழைய மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .