Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Freelancer / 2023 ஏப்ரல் 09 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எமது நாட்டில் மக்கள் பல துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.அவர்கள் அந்த துன்பங்களிலே இருளை காண்கின்றார்கள். ஆனால் இந்த ம்.உயிர்ப்பு திருவிழா அவர்களுக்கு ஒளியை தர வேண்டு என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இயேசு நாதரின் உயிர்ப்புத் திருவிழா எம் அனைவருக்கும் ஒரு எதிர் நோக்கைத் தரும் விழாவாக இருக்கிறது. இயேசுநாதர் தனது வாழ்க்கையில் எத்தனையோ பேரை குணமாக்கினார் என்று அவர் விடுத்துள்ள உயிர்த்த ஞாயிறு செய்தியில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனையோ பேருக்கு உயிர் கொடுத்தார்.பல்வேறு நோயினால் கஸ்டப்பட்டவர்களை அவர் குணமாக்கினார்.ஆனால் அன்று அவரை சூழ இருந்த யூத மக்கள் அவர் ஒரு இரட்சகர்.
அவர் எமக்காக வந்த ஒரு மெசியா என்று பாராமல் அவரை பாடு படுத்தி,சிலுவையைத் தூக்கிச் சொல்லி இறுதியில் சிலுவையில் அறைந்து கொன்றார்கள்.ஆனால் அவர் கூறியதன் படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
இதனை அவருடைய சீடர்கள் சாட்சிகளாக இருந்தபடியினால் அதனை அவர்கள் எழுதிக் கொடுத்துள்ளார்கள்.இவ்வாறு இயேசு நாதருடைய உயிர்ப்பு விழா மற்றவர்களுக்கு ஒளி வீசும் விழாவாக இருக்கிறது என்றார்.
எஸ்.றொசேரியன் லெம்பேட்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
44 minute ago
47 minute ago
1 hours ago