2025 மே 20, செவ்வாய்க்கிழமை

உரம் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

Freelancer   / 2022 ஜூலை 19 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் நிருபர் 

மன்னார் மாவட்டத்தில் இம்முறை சிறுபோக நெற்செய்கையினை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு யூரியா உரம் நேற்றைய தினம்  (18) மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி கமநல சேவைகள் நிலையத்தில் வைத்து வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.

கமநல சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட உதவி பணிப்பாளர் அன்ரன் மெரின் குமார் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு( யூரியா) உரம் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.

ஒரு ஏக்கர் சிறுபோக விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 40 கிலோ யூரியா உரம் வழங்கி வைக்கப்பட்டது.(a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X