2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ஊடகவியலாளரை தாக்கிய கட்சி ஆதரவாளர்கள்

Janu   / 2025 மே 06 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை பிரதான கட்சி ஒன்றின் ஆதரவுக் குழு , தாக்கிய சம்பவம்  வேலணை துறையூரில் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் உள்ளூர் அதிகார சபைத் தேர்தல் தொடர்பில் வேலணை பிரதேசத்தின் கள நிலவரங்களை செய்தி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் வேலணை துறையூர் ஐயனார் வித்தியாலய வாக்காளர் மையத்தின் அருகே பிரதான கட்சி ஒன்றின்  ஆதரவாளர்கள் இன்னொரு தரப்பு ஆதரவாளர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டிருந்த சம்பவத்தை காணொளி எடுத்த போது பிரதான கட்சி குழுவினர் அவரை தாக்கியுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

நிதர்ஷன் வினோத்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X