Janu / 2025 டிசெம்பர் 14 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டிற்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் சனிக்கிழமை (13) அன்று விஜயம் மேற்கொண்டார்
அங்கு பொதுமக்களை சந்தித்து கலந்துரையாடி அவர்களுடைய குறைபாடுகளை அமைச்சர் கேட்டு அறிந்தார்
கட்டைக்காட்டு மக்களின் அடிப்படை பிரச்சினையாக காணப்படும் கட்டைக்காடு சுண்டிக்குள வீதி புனரமைப்பு மற்றும் கட்டைக்காடு இயக்கச்சி வீதி புனரமைப்பு,வனஜீவராசிகள் திணைக்ளத்தின் ஆளுகைக்குள் இருக்கும் மக்களின் காணிகள் விடுவித்தல் போன்ற முக்கிய விடயங்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது
இந்திய இழுவை மடி படகுகளால் மீனவர்களுடைய வலைகளும் இப்பகுதியில் பாதிப்படைவது குறித்து அமைச்சர் தனது கவலையை வெளிப்படுத்தினார்
மக்களுடைய குறைபாடுகளை கேட்டு அறிந்த அமைச்சர் இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்
மீன்பிடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக உற்பத்தி தொழில்களை ஊக்குவிக்க முயற்சித்திருப்பதாகவும் தெரிவித்தார்
இந்த விஜயத்தின் போது வடமராட்சி கிழக்கு தேசிய மக்கள் சக்தியின் இணைப்பாளர் மற்றும் பிரதிநிதிகள் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பூ.லின்ரன்

24 minute ago
37 minute ago
46 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
37 minute ago
46 minute ago
53 minute ago