2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 09 , பி.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி வீதி, உரும்பிராய் கற்பக பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் செவ்வாய்க்கிழமை (09) அன்று காலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளும், காரும் நேருக்குநேர் மோதியதிலேயே விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது மோட்டார் சைக்கிள் மற்றும் கார் என்பன பகுதியளவில் சேதமடைந்ததுடன் மோட்டார் சைக்கிளில் சென்றவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .