Editorial / 2026 பெப்ரவரி 05 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

பூ.லின்ரன்
கிளிநொச்சி உமையாள் புரம் பகுதியில் புதன்கிழமை (4) பிற்பகல் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது
குறித்த பகுதியில் சிறுவர்கள் தமது பொழுதுபோக்கு நடவடிக்கைக்காக நீர் ஓடும் வாய்க்கால் அருகாமையில் சென்ற போது வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்றை அவதானித்து உள்ளனர்.
உடனடியாக அச் சிறுவர்கள் கிளிநொச்சி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் ஆபத்தான நிலையில் காணப்பட்ட கைக்குண்டை உரிய பாதுகாப்புடன் அகற்றுவதற்கு கிளிநொச்சி நீதிமன்ற உத்தரவுக்கு தகவலை அனுப்பியுள்ளனர்
நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் வரை குறித்த இடத்தில் பாதுகாப்புக்காக கிளிநொச்சி பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்
1 hours ago
02 Mar 2026
02 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
02 Mar 2026
02 Mar 2026