Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஒக்டோபர் 23 , பி.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
யது பாஸ்கரன்
அடிப்படை உட்கட்டுமான வசதிகள் அற்ற நிலையில் இயங்கிவரும் கிளி/மலையாளபுரம் திருவள்ளுவர் ஆரம்பப் பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர்க் கிணறும் அதனுடன் இணைந்த குடிநீர் வழங்கல் கட்டமைப்பும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனால் மாணவர்களின் பயன்பாட்டுக்கு திங்கட்கிழமை (23) கையளிக்கப்பட்டுள்ளது.
இப்பாடசாலையில் நீண்டகாலமாக நிலவிவந்த குடிநீர்த்தேவையை நிவர்த்திசெய்யும் நோக்கில், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கோரிக்கைக்கு அமைவாக, நியூசிலாந்தில் வசிக்கும் அரியதாஸ் செல்வதாஸ் எனும் நன்கொடையாளரின் நிதிப்பங்களிப்பில், அவரது தாயாரான அமரர்.மேரிரெஜினா அரியதாஸ் ஞாபகார்த்தமாக இக் குடிநீர்க்கிணறு அமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட சிறீதரன் எம்.பியிடம், பாடசாலை அதிபரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, ஒலிபெருக்கி வசதியையும், சுற்று வேலி அமைக்கும் பணிகளையும் காலக்கிரமத்தில் மேற்கொள்வதாக எம்.பி உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
8 hours ago
8 hours ago
23 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
23 Aug 2025