2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் கைது

R.Tharaniya   / 2025 மே 08 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம், எழுவைதீ வடக்கு கடலில் இலங்கை கடற்படை நடத்திய  தேடுதல் நடவடிக்கையின் போது, மூன்று (03) சந்தேக நபர்களும், சுமார் முன்னூற்று ஒரு (301) கிலோகிராம் நூற்று ஐம்பது (150) கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற ஒரு டிங்கி (01) படகும் புதன்கிழமை (07) அன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடக்கு கடற்படை  கிடைத்த தகவலின் அடிப்படையில், இலங்கை கடற்படை கப்பல் எலார எழுவைதீவு கடல் பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, அந்த கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு(01) ஒன்று பயணிப்பதை அவதானித்து சோதனை செய்யப்பட்டது

அந்த நேரத்தில், மூன்று (03) சந்தேக நபர்களையும் (01) டிங்கி படகும், எட்டு (08) பொதிகளில் நூற்று முப்பத்தொன்பது (139) பொதிகளாக பொதிச்செய்யப்பட்டிருந்த முந்நூற்று ஒரு (301) கிலோகிராம் நூற்று ஐம்பது (150) கிராம் கேரள கஞ்சாவையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு நூற்று இருபது (120) மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 43 முதல் 58 வயதுக்குட்பட்ட மன்னார் ஒலுதுடுவாய் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

மூன்று (03) சந்தேக நபர்கள், கேரள கஞ்சா பொதிகள் மற்றும் டிங்கி படகு (01) ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட உள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X