Janu / 2026 ஜனவரி 19 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டும், சில கோரிக்கைகளை முன் வைத்தும் வவுனியா சூடுவந்த குளம் பகுதியை சேர்ந்த மாற்றாற்றல் கொண்ட இளைஞரான மக்கின் முகமது அலி, சக்கர கதிரையில் செவ்வாய்க்கிழமை (20) முதல் மன்னாரிலிருந்து இலங்கை முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
வடமாகாண சக்கர கதிரை கிரிக்கெட் அணியின் தலைவரான மக்கின் முகமது அலி திங்கட்கிழமை (19) காலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து, மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனை சந்தித்து தனது பயணம் குறித்து கூறியுள்ளார்.
இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது பயணத்தை ஆரம்பிக்க உள்ளதாகவும், குறிப்பாக, நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளும் வகையிலும் அனர்த்தத்தின் போது எவ்வித வேறுபாடுகளுமின்றி ஒருவருக்கு ஒருவர் உதவிகளை மேற்கொண்ட நிலையில் இலங்கை மக்களிடையே உள்ள ஒற்றுமையையும், சமூக நல்லெண்ணத்தையும் நோக்காகக் கொண்டும் குறித்த பயணம் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.
அத்துடன் படித்த மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்புகளின்றி முடங்கியுள்ளனர். அவர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும். என்ற கோரிக்கைகளையும் முன் வைத்துக் குறித்த பயணம் மன்னாரில் இருந்து ஆரம்பிக்கப்படுகிறது.
இலங்கை முழுவதும் சுமார் 1500 கிலோ மீற்றருக்கும் அதிகமான கடற்கரையோரமாகக் குறித்த பயணம் முன்னெடுக்கப்படவுள்ளது.
எனவே மக்கள் தமது ஆதரவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து, மாவட்ட அரசாங்க அதிபரிடம் தனது பயணத்தின் நோக்கத்தைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எஸ்.ஆர்.லெம்பேட்

10 minute ago
23 minute ago
27 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
23 minute ago
27 minute ago
34 minute ago