2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சட்ட விரோத மணல் அகழ்வால் குடிமனைகளுக்குள் கடல் நீர்

Freelancer   / 2022 டிசெம்பர் 09 , மு.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு, செம்மலையில் குடிமனைகள், விவசாய நிலங்கள் என்பவற்றுக்குள் கடல் நீர் உட்புகுவதைத் தடுப்பதில், கரைதுறைபற்று பிரதேச சபையினரும் கிராம மக்களும் இணைந்து செயற்பட்டு வருவதாக கரைதுறைபற்று பிரதேச சபையின் தவிசாளர் க. விஜிந்தன் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது: செம்மலை கடலில் இருந்து குடிமனைகள் விவசாய நிலங்களுக்குள் கடல் நீர் உட்புகுவதாக நேற்று (08) முற்பகலில் கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து, கரைதுறைபற்று பிரதேச சபையின் கனரக வாகனத்தின் உதவியுடன் கிராம மக்களும் இணைந்து, கடல் நீர் பரவுவதை தடுத்தனர்.

 கடந்த காலங்களில் இப்பகுதியில் இடம் பெற்ற சட்ட விரோத மணல் அகழ்வு காரணமாகவே, கடல் நீர் குடிமனைகள் விவசாய நிலங்களுக்குள் பரவும் நிலை ஏற்பட்டதாக, கிராம மக்களால் தெரிவிக்கப்பட்டது.  (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X