Janu / 2025 நவம்பர் 20 , பி.ப. 01:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக ஜி.எம்.எச்.புத்திக சிறிவர்தன, காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (20) அன்று சர்வமத வழிபாடுகளுடன் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்த திலக் தனபால வட மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இந்நிகழ்வில் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட பொலிஸ் உயர் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஜி.எம்.எச்.புத்திக சிறிவர்தன இதற்கு முன்னர் பொலிஸ் தலைமையகம் மற்றும் வட மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவிகளில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிதர்ஷன் வினொத்

45 minute ago
23 Nov 2025
23 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
23 Nov 2025
23 Nov 2025