2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

சிறுவர் தினத்தையொட்டி பொருட்கள் அன்பளிப்பு

Janu   / 2025 ஒக்டோபர் 07 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். ஏழாலை தெற்கு மயிலங்காடு கிராமத்தில் உள்ள ஶ்ரீ முருகன் முன்பள்ளியில் தேசிய சிறுவர் மற்றும் ஆசிரியர் தினங்களையொட்டி கலை நிகழ்வுகள் திங்கட்கிழமை (06) அன்று சிறப்பாக நடைபெற்றன.

இந்நிகழ்வுகள் ஏழாலை தெற்கு மயிலங்காடு கிராமத்தில் உள்ள கலாச்சார அபிவிருத்தி ஒன்றிய மண்டபத்தில் நடைபெற்றது.

ஶ்ரீ முருகன் முன்பள்ளியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஜேர்மன் நாட்டின் லுவிக்ஸ்பர்க் பிரதேசத்தில் வசிக்கும் கந்தசாமி சந்திரன்  வழங்கிய நிதியுதவியின் ஊடாக சமூக மேம்பாட்டு கழகத்தினர் தேவையான பொருட்களை வழங்கினர்.

நிகழ்வில் பிரதம விருந்தினராக ஏழாலை ஶ்ரீ முருகன் வித்தியாலயத்தின் ஓய்வுநிலை அதிபர் சைவப்புலவர் செல்லையா பரமேஸ்வரன் , சிறப்பு விருந்தினர்களாக சமூக மேம்பாட்டுக் கழகத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் இ.தயாபரன், சமூக செயற்பாட்டாளர் ப.சிறீதரன் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக வலி. தெற்குப் பிரதேச சபை உறுப்பினர் க.அபராசுதன், மயிலங்காடு கலாச்சார ஒன்றியச் செயலாளர் நா.ரமேஷ், ஶ்ரீ முருகன் சனசமூக நிலையத்தின் பொருளாளர் கி.இராஜசேகர், ஶ்ரீ முருகன் அறநெறிப் பள்ளி ஆசிரியர் கு.யாம்சனா ஆகியோருடனும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X