2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

சிவகங்கை கப்பல் கட்டணம் குறைவு

R.Tharaniya   / 2025 மே 01 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு சுபம் நிறுவனத்தின் சார்பில் சிவகங்கை பயணிகளுக்கு கப்பல் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

வாரத்தில் செவ்வாய்க்கிழமைதவிர்த்து ஆறு நாட்கள் இயக்கப்பட்டு வரும் கப்பல் சேவையில் இரு நாட்டு பயணிகளும் பயன் பெற்று வருகின்றனர். 

இந்த நிலையில் சிவகங்கை கப்பல் நிறுவனத்தில் அதன் தலைவர் சுந்தர்ராஜன் வியாழக்கிழமை (1) நாகப்பட்டினம் பத்திரிகையாளர்மன்றத்தில் செய்தியாளர்களைசந்தித்தார். 

அப்போது நாகப்பட்டினத்தில்இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சிவகங்கை கப்பல் சேவை இயக்கப்பட்டு வருவதாகவும், அதில் கோடை விடுமுறை முன்னிட்டு பயணிகளை கவரும் விதமாக தற்போது 8,500 ரூபாயாக உள்ள சென்று வருவதற்கான கட்டணம் 8000 ரூபாவாக குறைக்கப்படுவதாக தெரிவித்தார். 

மேலும் தற்பொழுது 10 கிலோ வரை அனுமதிக்கப்படும்இலவச லக்கேஜ் இனி 22 கிலோ வரை அனுமதிக்கப்படும் என்றும் அதில் 7 கிலோ கைப்பை 15 ஒரு கிலோ லக்கேஜ் இலவசமாக அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

மேலும் ஜூன் முதல் வாரத்தில் 250 பேர் பயணிக்க கூடிய கப்பல் இயக்கப்பட உள்ளதாகவும், கார்கோ கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கையும்எடுக்கப்பட்டு வருவதாக கப்பல் நிறுவனத் தலைவர் சுந்தர்ராஜன் மேலும்  தெரிவித்தார்.

 எஸ்.ஆர்.லெம்பேட்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X