Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 15 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியாவில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக தமிழ் கட்சிகளுக்கிடையில் பொது இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கட்சிகளின் முக்கியஸ்தர்களிற்கிடையில் தமிழரசுக் கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) அன்று காலை இடம்பெற்றது.
கலந்துரையாடலில் பங்கு கொண்டிருந்ததமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக தேசிய கூட்டணி ஆகியவற்றின் பிரநிதிகளிற்கிடையில் பொது நோக்கம் ஒன்றை அடிப்படையாக கொண்டு வவுனியாவில் உள்ள நான்கு சபைகளிலும் இணைந்து ஒரு நிர்வாகத்தை உருவாக்குவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் வவுனியா மாநகரசபையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு மாநகர முதல்வர் பதவியும், பிரதி முதல்வர் பதவி ஜனநாயக தேசியக் கூட்டணிக்குமுதல் இரண்டு வருடங்களுக்கும், அடுத்த இரு வருடங்களுக்குஇலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் பதவி தமிழரசுக்கட்சிக்கு உப தவிசாளர் பதவி ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
உப தவிசாளர் பதவியை இரண்டு வருடங்களுக்குபகிர்வது தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும்,அகில இலங்கை மக்கள் காங்கிரசும் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமிழரசுக்கட்சிக்கு தவிசாளர் பதவியை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு உபதவிசாளர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வெங்கல செட்டிகுளம் பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்திக்கு தவிசாளர் பதவியை தமிழரசுக்கட்சிக்கு உப தவிசாளர் பதவியை ஒதுக்கப்பட்டுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில்பாராளுமன்ற உறுப்பினர்களானப.சத்தியலிங்கம்,றிசாட் பதியுதீன், முத்து முகமது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஜனநாயக தேசிய கூட்டணி சார்பில் சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் க.துளசி உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
க. அகரன்
23 minute ago
29 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
29 minute ago
45 minute ago