2026 ஜனவரி 31, சனிக்கிழமை

தென் மோடிக் கூத்து: காப்பு பாடி ஆரம்பிப்பு

Editorial   / 2026 ஜனவரி 26 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூ.லின்ரன்

செம்பியன் பற்று வடக்கு புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் அண்ணாவியார் கலாச்சாரம் றோக்கு யூட்சன் செபசின்ரனின் நெறிப்படுத்தலில் யுவானியார் தென் மோடி நாட்டுக் கூத்து காப்பு பாடல் ஆலயத்தில் செம்பியன் பற்று பங்கு மக்கள் முன்னிலையில் பாடப்பட்டு ஞாயிற்றுக்கிழமை (25) அன்று மாலை 5 மணியளவில்  ஆரம்பிக்கப்பட்டது 

வரலாற்று சிறப்பு மிக்க புனித பிலிப்பு நேரியார் ஆலய திருவிழாவான எதிர் வரும் வைகாசி மாதம் 26 திகதி அன்று பிற்பகல் 9:30 மணியளவில் தென் மோடி நாட்டுக்கூத்து மேடையேற்றப்பட உள்ளது 

செம்பியன் பற்று பங்கு மக்களின் வரலாற்று ரீதியாக இடம் பெற்று வரும் பாரம்பரிய நிகழ்வான புனித செபஸ்தியார் திருவிழாவில் விருந்து உபசார நிகழ்வும் செம்பியன் பற்று பங்கு தந்தை ஜஸ்டின் ஆதர் தலைமையில் காப்பு பாடுதலை தொடர்ந்து மிக சிறப்பாக இடம் பெற்றது 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X