2026 மே 15, வெள்ளிக்கிழமை

dd

’தேவநம்பியதீசனின் காலத்தின் பின்னரே பௌத்த மதம் வந்தது’

Niroshini   / 2021 பெப்ரவரி 14 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

தேவநம்பியதீசனின் காலத்தின் பின்னரே, இலங்கைக்கு பௌத்த மதம் வந்ததாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,  தமிழர்களே இந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் எனவும் கூறினார்.
 
வாதரவத்தை பொதுநோக்கு மண்டபத்தில், நேற்று (13)  நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
 அங்கு தொடர்ந்துரைத்த அவர், இந்த மண்ணிலே  நாளுக்கு நாள் வெவ்வேறான பிரச்சினைகளை தாங்கள் சந்தித்துக் கொண்டிருப்பதாகவும் 
 தொல்லியல் என்ற பெயரில் தங்கள்  தொன்மங்கள்அழிக்கப்பட்டுக் கொன்டு இருப்பதாகவும் சாடினார். 
 
சிவலிங்க வழிபாடு மேற்கொண்ட இடங்களை எல்லாம் புத்தர் சிலை இருந்தது எனக் கூறி தங்கள் வழிபாட்டு உரிமையை கேள்விக்கு உள்ளாக்குவதாக குற்றஞ்சாட்டிய அவர்,  தங்கள் கலாசார, பண்பாட்டு விழுமியங்கள், நவநாகரிகம் என்ற பெயரில் இல்லாமல் போவதாகவும் கூறினார். 
 
"இளைஞர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகிறார்கள். இலங்கை நாட்டின் முப்படைகளும் ஆயுதங்களோடு  வடக்கு - கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை சுவீகரித்து வைத்திருக்கின்றார்கள். எந்த இடத்திலும் இல்லாதவாறு தமிழர்களின் இடங்களில்  ஆயுதப்படைகள் குவிக்கப்பட்டிருக்கின்ற நிலையிலும், எவ்வாறு போதைப்பொருள் எமது இளைஞர்களுக்கு கிடைக்கிறது?" எனவும், சிறிதரன் எம்.பி வினவினார்.
 
இலங்கைக்கு தேவநம்பியதீசன் காலத்திலே தான் பௌத்த மதம் வந்ததாகத் தெரிவித்த அவர்,  அதற்கு முன்னர் இங்கு இராவணன் என்ற சிவபக்தன் இந்த இலங்கையை ஆண்டிருக்கிறாரெனவும் தேவநம்பியதீசன் காலத்துக்கு முன்பாக ஆண்ட மன்னர்கள் எல்லோரும் இந்துப் பண்பாட்டுடன் தான் ஆண்டிருக்கிறார்கள் எனவும் கூறினார்.
 
"திருமூலர் இலங்கையை சிவபூமி என்று அழைப்பதன் மூலமே தெளிவாகிறது, சிவவழிபாடு மிகச்சிறந்த முறையில் இங்கு நடை பெற்றிருக்கிறது. தேவநம்பிய தீசனின் தந்தை கூட மூத்த சிவன் என்பதுதான்  சிவன் என்பது தமிழர்களின் கடவுளின் பெயரையே குறிக்கிறது. 
 
"தீசன் சிவன் போன்ற பெயர்கள் இப்போதும் தமிழர்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால், இதில் இருந்தே தெளிவாகிறது இந்த நாட்டினுடைய வரலாறு எவ்வாறு திரிபுபடுத்தப்படுகிறது என்பது தெளிவாகிறது" எனவும், அவர் மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .