2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Janu   / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒப்புக்கொள்ளப்பட்ட MCA கொடுப்பனவை உடனடியாக வழங்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தை புதன்கிழமை (20) அன்று மேற்கொண்டது

நாடு முழுவதும் உள்ள அரச பல்கலைக்கழகங்கள் இந்த அடையாள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தை நாடாத்தியுள்ளதுடன் இதன் போது நீக்கி விடப்பட்ட 20% ஐ உடனடியாக வழங்கு , அதிகரிக்கப்பட்ட இடர் கடனை உடனடியாக வழங்கு , மக்களாட்சி அரசாங்கம் பேச்சுவார்த்தையைத் தவிர்த்து வருகிறது , ஆகிய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது 

மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிதர்ஷன் வினோத்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X