Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 டிசெம்பர் 22 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு, மாங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, மாவட்ட செயலகம் உள்ளிட்ட முக்கிய தேவைகள் நிமித்தம் முல்லைத்தீவு நகருக்கு செல்லும் பொதுமக்கள், ஒட்டுசுட்டான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரச அலுவலகங்களுக்கு செல்லும் அரச அதிகாரிகள் உள்ளிட்டவர்கள், உரிய போக்குவரத்து வசதிகள் இன்றி தினமும் அல்லற்படுகின்றனர்.
காலை வேளையில் ஒருசில பஸ்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுவதால், உரிய நேரத்தில் கடமைக்களுக்கும் தேவைகளுக்கும் செல்லும் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, உரிய தரப்பினர் பஸ் சேவைகளை அதிகரித்து, இருக்கிற சேவைகளைத் தடைகள், தடங்கல்கள் இன்றி, உரிய முறையில் வழங்க, உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago