Editorial / 2026 மார்ச் 12 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு, மல்லாவி பகுதியில் பாம்பு தீண்டிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் புதன்கிழமை (11) மாலை உயிரிழந்துள்ளார்.
துணுக்காய் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய திருநாவுக்கரசு கிருபாகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். ஒரு பிள்ளையின் தந்தையான இவர், மாந்தை கிழக்கு பிரதேச சபையின் வருமானப் பரிசோதகராகக் கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது வயல் நிலத்தைப் பார்வையிடச் சென்ற போதே, இவரைப் பாம்பு தீண்டியுள்ளது. அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மல்லாவி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம், புதன்கிழமை (11) மாலை இடம்பெற்றுள்ளது.
தற்போது அன்னாரது சடலம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .