Janu / 2025 செப்டெம்பர் 04 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய செம்மணி வீதி சந்தியிலிருந்து கொக்குவில் சந்தி வரையான ஆடியபாதம் வீதி ஊடாக காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை டிப்பர் வாகனங்கள் பயணிப்பதற்கு நல்லூர் பிரதேச சபை தடை விதித்துள்ளது.
அத்துடன், ஏனைய பாரவூர்திகள் காலை 7 மணி தொடக்கம் 9 மணி வரையும் நண்பகல் 12 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணி வரையும் குறித்த வீதியூடாக பயணிப்பதற்கு தடை விதித்து, பொதுப் போக்குவரத்தை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்பள்ளி சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், உத்தியோகத்தர்கள் பணிக்குச் செல்லும் நேரம் மற்றும் அண்மையில் ஏற்பட்ட வீதி விபத்துகளை கருத்தில் கொண்டு பொதுப்போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்குடன் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் பலகைகள் வீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வாகன சாரதிகள் இந்த விதிமுறைகளை பின்பற்றுமாறு நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் அறிவுறுத்தியுள்ளார்
எஸ். தில்லைநாதன்

18 minute ago
28 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
28 minute ago
41 minute ago
2 hours ago