2025 மே 07, புதன்கிழமை

பூசகரிடம் கொள்ளையடித்த நகை மீட்பு

Janu   / 2024 மே 22 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாவகச்சேரி பிரதேசத்தில் பூசகர்  ஒருவரிடம்  கொள்ளையடிக்கப்பட்ட ஒன்றரை பவுண் தங்க நகையை செவ்வாய்க்கிழமை (21)  மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், சங்கத்தானையை சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகையினை உருக்கியவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த இருவரையும்  சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்திய போது அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார் . 

மேலும் இச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற ரீதியில் முல்லைத்தீவினை சேர்ந்த ஒருவர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

எஸ் .தில்லைநாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X