2025 மார்ச் 16, ஞாயிற்றுக்கிழமை

“மக்களின் காணிகளை அரசதிணைக்களங்கள் திருடுவதாக“ குற்றச்சாட்டு

R.Tharaniya   / 2025 மார்ச் 13 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட வன்னிப்பகுதியில், வனவளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்கள் மக்களின் விவசாய மற்றும், குடியிருப்புக் காணிகளை அத்துமீறி திருடியுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றில் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.

அதேவேளை இவ்வாறு மக்களின் காணித்திருட்டில் ஈடுபடும் திணைக்களங்களில் ஒன்றான வனவளத் திணைக்களம் வன்னியில் இடம்பெறும் சட்டவிரோத காடழிப்புச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தி, வன வளத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் தெரிவித்தார். வனவளத்தை தமிழீழ விடுதலைப் புலிகள் பாதுகாத்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றில் புதன்கிழமை (12)​ இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் மீதான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

காணி விடயங்களுக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்களிடம் மக்களினதும், எனது கருத்துக்களையும் குறிப்பிடுகின்றேன்.

முந்தைய ஆட்சியில் திணைக்களங்கள் காணித்திருட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தங்களுடைய ஆட்சியில் இவ்வாறான காணித் திருட்டுக்கள் நீக்கப்படவேண்டும் என அவர் கருத்து ​தெரிவித்தார்.

விஜயரத்தினம் சரவணன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .