Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 25 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள்,உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை (24) அன்று மாலை மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன்,மன்னார் பிரதேச சபையின் உப தவிசாளர் றொய் ற்றன் சாந்தினி குரூஸ்,மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஞானப்பிரகாசம் பிரேம் குமார் மற்றும் உள்ளூராட்சி உறுப்பினர்கள் இணைந்து செவ்வாய்க்கிழமை (24) அன்று மாலை மன்னார் ஆயர் இல்லத்திற்கு விஜயம் செய்து மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை சந்தித்து ஆசி பெற்றனர்.
இதன் போது மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடபட்டதாக அறிய முடிகின்றது.
எஸ்.ஆர்.லெம்பேட்
50 minute ago
16 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
16 Oct 2025