Janu / 2024 ஜூன் 04 , பி.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் ( (Marc-André Franche) மன்னாருக்கான விஜயம் ஒன்றை செவ்வாய்க்கிழமை (04) மதியம் மேற்கொண்ட நிலையில் பல்வேறு சந்திப்புக்களை முன்னெடுத்துள்ளார் .
மன்னார் மனித உரிமை மற்றும் அபிவிருத்தி நிலையத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
மேலும் மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மற்றும் ரனித்தா ஞானராஜ் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து மன்னார் நகர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சதோச மனித புதைகுழியையும் அவர் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார் .
இதன் போது ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதி நிதி உள்ளிட்ட குழுவினருடன் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகள்,மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா, மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் மற்றும் ரனித்தா ஞானராஜ் ஆகியோரும் கலந்துக்கொண்டுள்ளனர் .
எஸ்.ஆர்.லெம்பேட்


27 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
48 minute ago
2 hours ago