Janu / 2026 பெப்ரவரி 03 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறை பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக ஊர்காவல்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன மீனவர் ஊர்காவல்துறை பருத்தியடைப்பு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய கந்தராசா துஷாகரன் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் உள்ளிட்டவர்கள் திங்கட்கிழமை (02) மாலை மீன்பிடிக்க சென்றபோது பின் அணியத்திலிருந்து குறித்த நபர் கடலில் தவறி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
காணாமல் போன மீனவரை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செந்தூரன் பிரதீபன்

5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago