2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

முதிரை மரக்குற்றிகள் மீட்பு

Janu   / 2024 மே 09 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு , புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  இரணைப்பாலை பகுதியில் தனியார் காணி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் பல இலட்சம் பெறுமதியான நூறுக்கும் மேற்ப்பட்ட முதிரை மரக்குற்றிகள் முல்லைத்தீவு பொலிஸாரால் புதன்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளது . 

வனவள திணைக்களம், பொலிஸார் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களின் ஆதரவுடனே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் இதனால் இவர்களது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் .

இந்நிலையில்  இரணைப்பாலை பகுதியில் பாரியளவில் மரக்குற்றிகள் கொண்டுவந்து பதுக்கி வைத்திருப்பதாக புதன்கிழமை (08) மாலை புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போதும் அவர்கள் அது தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்காது அலட்சிய போக்குடன் செயற்பட்டதாக  வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு  தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

அதற்கமைய  முல்லைத்தீவு  விஷேட பொலிஸ் அணியினர் நடத்திய சோதனையில் போதே இவ்வாறு ,தனியார் காணி ஒன்றிலிருந்து  சுமார் 100 க்கு மேற்பட்ட அண்ணளவாக  50 இலட்சத்திற்கும் அதிக  பெறுமதியுடைய முதிரை மரக்குற்றிகள்  கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும்  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

சண்முகம் தவசீலன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X