Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மார்ச் 17 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ் மாவட்டத்தின்17 உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தி யாழ் தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் திங்கட்கிழமை(17) காலைகட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
கட்டுப்பணத்தை கட்சியின் பிரதிச் செயலாளர் மற்றும் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளருமான உமாசந்திர பிரகாஷ் செலுத்தியுள்ளார் இதன் போது உமாசந்திரா பிரகாஸ் மேலும் கருத்து தெரிவிக்கையில்...
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. எமது கட்சியின் தலைவர் மீது எமது மக்கள் கொண்ட நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் கூட இங்குள்ள மக்கள் அமோக ஆதரவு கொடுத்திருந்தார்கள்
இந்த முறை கணிசமான ஆதரவை பெறக் கூடிய நம்பிக்கையோடு இளம் வேட்பாளர்களை நிறுத்தி இத் தேர்தலில் போட்டியிடுகிறோம். வடக்கு கிழக்கு மலையகம் உள்ளடங்களாக இலங்கை முழுவதும் உள்ள சகல சபைகளிலும் நாங்கள் போட்டி போடுகிறோம். மக்களின் ஆதரவுடன் வெற்றிகளையும் பெற்றுக் கொள்வோம் என்றார்.
நிதர்சன் வினோத்
8 minute ago
14 minute ago
15 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
15 minute ago