2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

யாழில் சட்டவிரோத மணலுடன் ’’கன்ரர் ’’ வாகனம் பறிமுதல்

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 13 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். அரியாலைப் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிக் கொண்டிருந்த சிறிய ரக கன்டர் வாகனத்தை திங்கட்கிழமை (13) அன்று யாழ்ப்பாண பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,

அரியாலைப் பகுதியில் சட்ட விரோத மணல் கடத்தல் இடம் பெறுவதாக அண்மையில் புதிதாக யாழ்ப்பாண பிரதான பொலிஸ் பரிசோதகராக பொறுப்பேற்ற பாலித்த செனவிரட்னவின் பணிப்புரையின் கீழ் குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸார் இலக்கத் தகடற்று மணல் ஏற்றிக் கொண்டிருந்த குறித்த வாகனத்தை கைப்பற்றினர்.

சம்பவத்தில் வரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X