Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 15 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்.தென்மராட்சி வரணி பகுதியில் சனிக்கிழமை(14) அன்று காலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
சாவகச்சேரி பிரதேச சபைக்கு சொந்தமான கழிவகற்றும் பவுசர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அதாவது வேம்பிராய் வீதியால் வரணிப் பகுதி நோக்கி பயணித்த கழிவகற்றும் பவுசர் வாகனம் தும்புருவும் வீதியால் திரும்பிச் செல்ல முற்பட்ட பொது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் குறித்த பவுசருடன் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் மோட்டார் சைக்கிள் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நிதர்சன் வினோத்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .