2025 மே 01, வியாழக்கிழமை

ரி 56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்டது

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 16 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம்- குருநகர் கடற்கரைப் பகுதியில்  ரி 56 ரக துப்பாக்கியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டகுற்றத் தடுப்புப் பிரிவுபொலிஸாருக்கு கிடைத்த இரகசியதகவலுக்கமைய நடத்தப்பட்ட சோதனையில் ​செவ்வாய்க்கிழமை (15) அன்று இந்த ஆயுதம் மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட துப்பாக்கி பாவிக்க கூடிய நிலையில் இருப்பதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள யாழ்ப்பாணம் பொலிஸார் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக கைப்பற்றப்பட்ட  துப்பாக்கியை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நிதர்சன் வினோத்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .