Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 மே 28 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் - நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, வங்காலைப் பகுதியிலுள்ள கடலரிப்பு நிலமைகளை, அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், செவ்வாய்க்கிழமை (27) அன்று நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளார்.
இந்நிலையில் அப்பகுதி மக்களின் இடர்பாடுகளை கேட்டறிந்த அவர், கடலரிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
வங்காலை பகுதியில் கடலரிப்பு நிலமைகள் அதிகரித்துள்ளதால் கடல்நீர் கடற்கரையோர கிராமங்களுக்குள் உட்புகும் நிலை காணப்படுகின்றது. இதனால் அப்பகுதி மக்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
அப்பகுதி மக்கள் இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனுக்கு தெரியப்படுத்தியதையடுத்து, அவர் நேரடியாகச் சென்று நிலமைகளை பார்வையிட்டுள்ளதுடன், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
ஏற்கனவே கடலரிப்பை தடுப்பதற்கு வங்காலை பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டதைப்போன்று, ஆறு இடங்களில் தடுப்பணைகள் அமைக்கப்பட வேண்டும் எனவும், இதன்மூலமே கடல் நீர் கிராமத்திற்குள் உட்புகுவதைத் தடுக்கமுடிவதுடன், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களையும் தடுக்கமுடியமென மக்களால் அவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
கடலரிப்பால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், இந்த சிக்கல் நிலைமை தொடர்பில் உரிய தரப்பினரது கவனத்திற்கு கொண்டு சென்று, தடுப்பணை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
விஜயரத்தினம் சரவணன்
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago