2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வலிகாமம் தெற்கு இ.த.அ.க வசம்

R.Tharaniya   / 2025 ஜூன் 19 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தியாகராஜா பிரகாஷ் தெரிவானார்.

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர்மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் வியாழக்கிழமை(19) அன்றுவலிகாமம் தெற்கு பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.

31 உறுப்பினர்களை கொண்ட வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கான நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில்இலங்கை தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தலா 6 ஆசனங்களையும்தேசிய மக்கள் சக்தி 5 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.

தவிசாளர் பதவிக்காகஇலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில்போட்டியிட்ட தியாகராஜா பிரகாஷ் 14வாக்குகளையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கருணை நாதன் அபராசுதன் 12 வாக்குகளையும் பெற்றனர்.

தேசிய மக்கள் சக்தியின் ஐந்து உறுப்பினர்களும் வாக்களிப்பின் போது நடுநிலை வகித்தனர். உப தவிசாளராக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட செல்வரத்தினம் உதயகுமாரன் தெரிவானார்.

நிதர்சன் வினோத்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X