Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 11 , பி.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியாவில் பல்வேறு இடங்களில் வன வளத்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சட்ட விரோத முறையில் கடத்தமுற்பட்ட முதிரைமரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளதாக வனவளத்திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் பற்றிதெரியவருவதாவது, வனவளத் திணைக்கள த்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மாவட்ட வன வள திணைக்கள அதிகாரி அஜித்ஜயசிங்கவின் நெறிப்படுத்தல் இன் கீழ் மாவட்ட வன வளஅதிகாரி உடார சஞ்சீவவின் தலைமையிலான வன வள உத்தியோகத்தர்கள் மற்றும் விசேடஅதிரடிப் படையினர் இணைந்து ஓமந்தை மற்றும் கூமாங்குளம் பகுதியில் விசேடநடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இந்த நடவடிக்கையின் போது 27 முதிரை குற்றிகள் மீட்கப்பட்டதுடன் இரு கப்ரக வாகனமும் மீட்கப்பட்டிருந்தது. இதே வேளை வவுனியாவில் உள்ள மரக்கிளையில் இருந்து அனுமதிபெறப்படாமல் 13 இலட்சம் பெறுமதியான தேக்குமரபலகைகள் மீட்கப்பட்டதுடன், பறய நாலங்குளம் பகுதியில் காடழிப்பில் ஈடுபட்டவர்களிற்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன்,காடழிப்புக்கு பயன்படுத்திய டோசர் வாகனமும் கைப்பற்றப்பட்டது.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், புதன்கிழமை (11) அன்று நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
க. அகரன்
52 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
59 minute ago
1 hours ago