Editorial / 2026 மார்ச் 27 , பி.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு அரச நிர்வாகத்தின் மூலம் மிகவும் வினைத்திறனான மற்றும் துரிதமான சேவையை வழங்குவதை இலக்காகக் கொண்டு, 2026 ஆம் ஆண்டுக்கான மூன்றாவது மாவட்ட பிரதேச செயலாளர்கள் மாநாடு வியாழக்கிழமை (26) துணுக்காய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மாவட்டத்தின் தற்போதைய சவால்கள் குறித்து இம்மாநாட்டில் விரிவாக ஆராயப்பட்டது:
துணுக்காய் பிரதேச செயலாளர் இ. ரமேஷின் சிறப்பான ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) திருமதி எஸ். மஞ்சுளாதேவி, மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்டப் பிரதம கணக்காளர், மாவட்டப் பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் மற்றும் மாவட்ட நலன்புரிச் சபையின் இணைப்பாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, துணுக்காய், ஒட்டுசுட்டான் மற்றும் மாந்தை கிழக்கு ஆகிய பிரிவுகளின் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலரும் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.





























5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago