Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Janu / 2024 மே 09 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை (09) மு.ப 8.30 மணியளவில் வேம்படிச் சந்தியிலிருந்து யாழ். போதனா வைத்தியசாலை வீதியூடாக காங்கேசந்துறை வீதி சத்திரச் சந்தி வரை வீதிப்பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபவணி இடம்பெற்றுள்ளது .
இதன்போது , வீதியில் காணப்படும் இடர்பாடுகளுடைய இடங்களை அடையாளங்காணல், வீதிப் பாதுகாப்பு மற்றும் வாகனப் நடைமுறைகளைப் பின்பற்றல் பரிசோதனை போன்ற செயற்பாடுகள் நடைபெற்றுள்ளது .
குறித்த செயற்பாட்டை தொடர்ச்சியாக ஏனைய பகுதிகளில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்,யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர், வடக்கு மாகாண மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர், மோட்டார் வாகன பரீட்சகர்கள், அதிகாரிகள், யாழ்ப்பாண பிரதேச செயலாளர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், போக்குவரத்து பொலிஸார், வைத்தியர்கள், மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர் .
நிதர்ஷன் வினோத்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
32 minute ago