Janu / 2026 பெப்ரவரி 08 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று தனிப்பனை பகுதியில் சனிக்கிழமை (7) பிற்பகல், வெடிக்காத நிலையில் மோட்டார் வகைக் குண்டு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் வசிக்கும் நபர்கள் ஆடு மேய்ப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்ற போது வெடிக்காத நிலையில் மோட்டார் வகைக் குண்டு ஒன்றை அவதானித்துள்ளனர் .
அவர்கள் உடனடியாக இது தொடர்பாக மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவித்துள்ளதுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ஆபத்தான நிலையில் காணப்பட்ட மோட்டார்வகைக் குண்டினை உரிய பாதுகாப்புடன் அகற்றுவதற்காக கிளிநொச்சி நீதிமன்றத்திற்கு தகவலை அனுப்பியுள்ளனர்
நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் வரை குறித்த இடத்தில் பாதுகாப்புக்காக மருதங்கேணி பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பூ.லின்ரன்

1 hours ago
02 Mar 2026
02 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
02 Mar 2026
02 Mar 2026