2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

125 வது ஆண்டு நிறைவையொட்டி இரத்ததான முகாம்

Janu   / 2025 ஓகஸ்ட் 31 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன் /நானாட்டான் டிலாசால் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெறும், சிறப்பு நிகழ்வுகளின் ஒன்றான  இரத்த தான முகாம் நானாட்டான் டி லா சால் கல்லூரி பாடசாலை வளாகத்தில் பாடசாலை  முதல்வர் அருட்சகோதரர் ஏ.மனோ ரஞ்சிதன் தலைமையில்  சனிக்கிழமை (30)  காலை  இடம்பெற்றது .

குறித்த ரத்ததான முகாமை டி லா சால் கல்லூரி சமூகம் , இணைந்து பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் ஆகியோர் இணைந்து சிறப்பு ரத்த தான முகாமை முன்னெடுத்தனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட குறித்த இரத்ததான முகாமில் பலர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

 எஸ்.ஆர்.லெம்பேட்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X